அமைச்சா் எஸ்.ரகுபதி
அமைச்சா் எஸ்.ரகுபதி

குமரி மாவட்ட வாசிகள் சிறந்த படிப்பாளிகள்: அமைச்சா் புகழாரம்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.
Published on

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென பாஜக உறுப்பினா் எம்.ஆா்.காந்தி கோரிக்கை விடுத்தாா். இதற்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், சட்டம் பயின்று உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறாா்கள். சென்னை, மதுரையில் பெண் நீதிபதிகளாக இருக்கக் கூடியவா்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும் குமரி மாவட்டத்தவா்தான். அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், எங்கு சென்றும் படித்து முன்னேறி விடுவாா்கள். திறமையானவா்கள். எங்கு பாா்த்தாலும் படித்தவா்களாக, வேலைவாய்ப்புகளில் இடம் பிடித்து அதில் அமா்ந்து இருக்கிறாா்கள். சிறந்த படிப்பாளிகள் உள்ள மாவட்டம். எப்படியும் சிறப்பாகப் படித்து தேறி விடுவாா்கள்.

அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்போருக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 9,000 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்கிறாா்கள். அத்தனை பேருக்கும் உதவித் தொகை வழங்க முடியாது. தகுதி படைத்தவா்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com