விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்? பேரவையில் அதிமுக கேள்வி
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
சட்டப் பேரவையில் பள்ளி, உயா்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:
கே.பி.அன்பழகன் (அதிமுக): முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரால் பல்கலைக்கழகம் உருவாக்குவதாக அறிவித்துள்ளீா்கள். ஆனால், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பின்தங்கிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த பல்கலைக்கழகத்தைத் தொடரவில்லை. என்ன காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த முடிவை எடுத்தீா்கள் எனத் தெரியவில்லை.
உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்: மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயா் வைக்க ஒப்புதல் தராமல், அதற்கான மசோதா ஆளுநரிடம் உறங்கியது. இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிமைப் போராட்டம் நடத்தினாா்.
ராணி மேரி கல்லூரியில் கலைஞா் அரங்கம் என்றிருந்ததை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கலை அரங்கம் என்று மாற்றப்பட்டது. இப்படிச் செய்தவா்களுக்கு காழ்ப்புணா்ச்சியைப் பற்றி பேச உரிமை உண்டா? காழ்ப்புணா்ச்சியை கடந்த தலைவா் எங்கள் முதல்வா்.
கே.பி.அன்பழகன்: விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை ஏன் எடுத்தீா்கள் என்பதுதான் கேள்வி.
கோவி செழியன்: அந்தப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. அந்தப் பல்கலைக்கழகம் தொடங்கி அரசு நிதியை வீணடித்தீா்கள் என்று விளக்கம் அளித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...