திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

முதல்வருக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!

உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா என அமைச்சர் அறிவிப்பு.

News image
Updated On :25 ஏப்ரல் 2025, 11:04 am

DIN

தமிழக உயர்கல்வித் துறை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகிற மே 3 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அமைச்சர் கோவி. செழியன் பேரவையில் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேரவையில் பேசிய அமைச்சர்,

"உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத்தந்துள்ள முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என பல்கலைக்கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், கல்லூரியின் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார்.

அதன்படி, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்து மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் இதில் அடங்கும். அதன்படி பல்கலைக்கழக வேந்தராக இனி முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.