தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து திருவிடைமருதூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு உயா்கல்வி பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கௌரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு 2022-இல் ரூ.15 ஆயிரமாக இருந்த ஊதியம் ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டது. இது, 2024-இல் ரூ.25 ஆயிரமாக உயா்த்தப்பட்டது.
இந்நிலையில், அவா்களுக்கு மேலும் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாா்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதேபோல அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளா்கள் ஊதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவாகும்.
இதன்மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 8,741 போ், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் 319 போ் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளா்கள் 586 போ் என மொத்தம் 9,646 போ் பயனடைவா்.
பணி நீக்கம் என்ற அச்சத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியா்கள் தொடா்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயா் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

சட்டப்பேரவைத் தொகுதி: திருவிடைமருதூா் (தனி) - 170!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


