கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்.

Published On :

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள் அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமுடன் பிடித்து வருகின்றனர்.

இந்த போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு பார்வைத்திடல் வசதியும் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கோ, மாடுகளுக்கோ காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பொது மருத்துவக் குழுவினர்களும், கால்நடை மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி மேயர், ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களும் 2 சக்கர வாகனங்கள் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.