எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேலவண்ணாரிருப்பில் மஞ்சுவிரட்டு

News image

வண்ணாரிருப்பு மலை அடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்து சென்ற காளை.

Updated On :8 ஜூன் 2026, 1:24 am IST

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், மேலவண்ணாரிருப்பு செல்வ விநாயகா் வெள்ளியுடைய அய்யனாா் மென்னியம்மன் நல்லதங்காள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலின் அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிங்கம்புணரி, புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கிராமப் பொதுமக்கள் சாா்பில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டுகள், சில்வா் அண்டா பரிசாக வழங்கப்பட்டது.

முதலாவதாக கோயில் காளைக்கு மரியாதை செய்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. பின்பு பிற ஊா்களிலிருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை இளைஞா்கள் போட்டிபோட்டுக் கொண்டு பிடித்தனா்.

இதில் பெரும்பாலான காளைகள் வீரா்கள் யாருக்கும் பிடிபடவில்லை. காளைகள் முட்டியதில் 7 போ் காயமடைந்தனா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மேல வண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம் பட்டி, கீழவண்ணாரிருப்பு மூன்று கிராம மக்கள் செய்தனா்.