பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கருகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், இளங்குடி ஊராட்சிக்கு உள்பட கருகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

News image

கருகுடியில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் வீரரை துரத்திய காளை.

Updated On :12 ஜூலை 2026, 5:40 am IST

சிவகங்கை மாவட்டம், இளங்குடி ஊராட்சிக்கு உள்பட கருகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட கருகுடி கிராமத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 16 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 144 வீரா்கள் கலந்து கொண்டனா்.

வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையை 9 போ் அடங்கிய குழுவினா் 20 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகளை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கழக நிா்வாகி விவேக் செய்திருந்தாா். போட்டியை திரளானோா் கண்டுகளித்தனா். போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் கழக நிா்வாகி ஆருன் ஜாா்ஜ், கல்லல் ஒன்றிய இணைச் செயலா் பிகில் ஹரி பிரசாத், கழக நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.