ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொங்கு பாலம் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள்

Updated On :1 ஆகஸ்ட் 2025, 11:44 am IST

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.

கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்ததது.

தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு 5 நாள்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.

இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.