வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
CM Stalin inaugurated Vietnam's Vinfast E-vehicle plant
காரில் கையெழுத்திடும் முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான்.

நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி ஆகிறது என்றார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Summary

CM Stalin inaugurated the Vinfast electric vehicle manufacturing plant in Thoothukudi today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com