
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்புமணியின் செயல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றியதைத் தொடர்ந்து வன்னியர் சமூக மக்களுக்கான உரிமைகள் குறித்து ராமதாஸ் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
’’போதைப்பொருள்களை தடுப்பதில் தமிழக மக்களும் முனைப்புடன் உள்ளனர். தமிழ்நாட்டில் கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்; அதை செய்வது பெரிய காரியம் அல்ல. என்னுடன் 10 அதிகாரிகளை அனுப்புங்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்டால், அந்த இரு தீமைகளும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
என்னுடைய நண்பர் கலைஞர் கருணாநிதி 20% ஒதுக்கீடு அளித்தார். தற்போது, அண்டை மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் இன்னும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?
உடனடியாக 10.5% உள் ஒதுக்கீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாள்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும் தமிழ்நாடு.
2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். நான் சொல்வதுதான் நடக்கும்
யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காதீர்கள்’’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதையும் படிக்க | பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.