
சிவகங்கை: சிவகங்கையில் பாஜக நிர்வாகி வியாழக்கிழமை நள்ளிரவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மஜித் சாலை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சதீஷ்குமார் (51). இவர் வாரச் சந்தை பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு நண்பர்களுடன் சதீஷ்குமார் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, சதீஷ்குமார் உயிரிழந்த நிலையில், கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவருடன் மது அருந்தியவர்கள் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது மதுபோதையில் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சதீஷ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவருடன் மது அருந்திய நபர்களில் சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.