'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து

'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து
Updated on
1 min read

'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்துக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ரஜினிகாந்தின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.

திரைக்கலையில் ரஜினிகாந்தின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.

சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள ரஜினிகாந்துக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Seeman congratulates Rajinikanth for receiving the 'Lifetime Achievement Award'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com