கி.பி.17 ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை வேகவதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள திருவள்ளுவா் தெருவில் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் சிற்பம் ஒன்றினை வரலாற்று ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.










