

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளையம் பாறைக்காடுமேட்டில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான இடத்தை பிளாஸ்டிக் குடோனுக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.
தற்போது பிளாஸ்டிக் குடோன் காலி செய்யப்பட்டு காலியாக இருந்த இடத்தில் பழைய பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் குடோனை பராமரித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் கழிவுக் குப்பைகளைக் குவித்து வைத்து தீயிட்டுள்ளார்.
அப்போது திடீரென அருகில் இருந்த கழிவு பிளாஸ்டிக் பொருள்களில் தீ பரவித் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பெரும் கரும்புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மேலும் அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர்.
தீயணைப்புத் துறை வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுத்து பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், இந்த தீ விபத்து குறித்து எடப்பாடி போலீஸால் விசாரணை மேற்கொண்டு வருவதோடு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.