விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி...
P.R. Pandian
விவசாய சங்கத் தலைவா் பி.ஆா் பாண்டியன்கோப்புப்படம்
Updated on
1 min read

விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓஎன்ஜிசி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுக்கும் பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக 2015ல் திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியபுரத்தில் தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஓஎன்ஜிசி தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Summary

Farmers Association leader P.R. Pandian sentenced to 13 years in prison

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com