

தவெகவுடன் அமமுக கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.
அமமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், ``கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் நாள் இருக்கிறது.
கூட்டணிக்காக, கூட்டணியைத் தலைமையேற்று நடத்துகிற சில கட்சிகள், எங்களை அணுகி பேசி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள், ஓரணியில் இணைய வேண்டும் என்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.
தூங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லது தூங்குவதுபோல நடிப்பவர்கள், தேர்தலின் முடிவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஒருங்கிணைவார்கள் என்று நம்புகிறேன்.
நான்கு முனைப் போட்டிதான் இருக்கும். ஆனால், சிலர் ஐந்து முனைப் போட்டி என்று தவறாக இருக்கும் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகள், வெற்றியை நோக்கி அணிவகுப்பார்கள். தனித்துப் போட்டியிடும் சீமான், ஆளும் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, விஜய் தலைமையிலான ஒரு வலுவான கூட்டணி அமையும் என்ற செய்திகள் வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.