

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"சில கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியுள்ளன. தவெக என்ற புதிய வரவு வேறு இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் இதையெல்லாம் சரிசெய்யவில்லை என்றால் திமுகவை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக நான் திமுக கூட்டணிக்குப் போகிறேன் என்று அர்த்தமல்ல.
தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால் அது திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன்.
தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமையும். வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும். சீமான் தனித்துப் போட்டியிடுவார். திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைய செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்வதை கேள்விப்படுகிறோம். அவ்வாறு தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. பழனிசாமி மீதான வருத்தத்தில் நான் இதனைச் சொல்லவில்லை. யதார்த்தத்தைச் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.