தஞ்சை, கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்பாக...
தஞ்சை, கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Updated on
1 min read

தஞ்சாவூர், கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றங்களில் உரியக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குரைஞர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் இந்த கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர், கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Lawyers are protesting in Thanjavur and Kumbakonam, boycotting court work.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com