

புது தில்லி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவராக இருந்த மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியிருக்கிறார்.
மக்களவையில் இன்று பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கருணாநிதி என்றும் மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டின் நீண்ட கால ஆட்சியாளர் மு.கருணாநிதிக்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தின் அரசியலாளர்கள் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்டோர் ஏற்கனவே பாரத ரத்னா பெற்ற தலைவர்களாகத் திகழ்கிறார்கள்.
இது பற்றி அரசியல் நோக்கர்களும், திமுகவினரும் கூறுவது என்னவென்றால், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருநங்கை, திருநம்பிகள் என்றும், மாற்றுத்திறநாளிகள் என்ற வார்த்தைகளையும் தந்தவர். அவர்களுக்கு நல வரியங்கள், நலத்திட்டங்களை ஏற்படுத்தியவர். சமத்துவப்புரங்களை உண்டாக்கியவர்.
பெண்களுக்கு சொத்துரிமையை கொண்டு வந்தவர். அந்த காலத்திலேயே போக்குவரத்தை நாட்டுடைமையாக்கியவர். மெட்ரோ, டைடல் பார்க், பள்ளிகளில் கணினி பாடத்தைக் கொண்டு வந்தவர். இந்திய நாட்டின் கூட்டாட்சியின் உரத்த குரலுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.