

கோவை : கோவையில் ஊருக்குள் இருந்த குட்டைக்கு வந்து, உற்சாகமாக குளியலாடிய யானைகளின் விடியோ வைரலாகியிருக்கிறது.
மக்களின் பாதுகாப்புக் கருதி ஊருக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டும் பணியும் நடந்து வருகிறது.
கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் வழி தவறி நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை கீரணத்தம் ஐடி பார்க் பகுதியில் மூன்று யானைகள் சுற்றித்திரிந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த குட்டையில் இறங்கி யானைகள் நீரில் விளையாடி உற்சாக குளியல் போட்டன. இதைப் பார்த்த மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் குளியல் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.