

நாமக்கல்: தங்கம், வெள்ளி விலைகள்தான் கலக்கத்தைத் தருகின்றன என்றால், ஏழை, எளிய மக்கள் நாள்தோறும் வாங்கிச் சாப்பிடும் முட்டை விலையும் இன்று பிரேக்கிங் செய்தியாக மாறியிருக்கிறது.
காரணம், 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோழி முட்டையின் விலை ரூ.6.15 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதான், இதுவரை மொத்தக் கொள்முதல் விலையில் உச்சபட்ச முட்டை விலையாகும் என்று கூறப்படுகிறது. அதாவது, இன்றைய நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ரூ.6.15 காசுகளுக்கு மொத்த வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில், ஏராளமானோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால், இந்த மாதத்தில் அதிகம் பேர் அசைவ உணவுகள் சாப்பிட மாட்டார்கள்.
இந்த மாதத்திலேயே முட்டை விலை இவ்வாறு உயர்ந்தால், அடுத்தடுத்த மாதங்களில் கோழி விலைக்கு முட்டை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் விலை ஒரு பக்கம் ஏறினால், அதை விட சில மடங்கு அதாவது இன்று காலை நிலவரப்படி, சில்லறை விற்பனை கடைகளில் ரூ.7 முதல் ரூ.7.50 வரை ஒரு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளை முன்னிட்டு கேக் போன்றவை செய்யும் பணிகளுக்காக, முட்டை அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.