சிபிஎஸ்இ 2026ல் செய்த மிகப்பெரிய மாற்றம்! பொதுத் தேர்வெழுதுவோர் கவனிக்க!!

சிபிஎஸ்இ 2026ல் செய்த மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து பொதுத் தேர்வெழுதுவோர் கவனிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ
சிபிஎஸ்இபிரதிப் படம்
Updated on
1 min read

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ, வரும் 2026ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்களை செய்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அதாவது, வரும் 2026ல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், தேர்வு அழுத்தம் இல்லாமல் எழுதும் வகையில் சில மாங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுத் தேர்வு போன்ற அறிவிப்புகளையும் செய்துள்ளன.

அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்களில் மாற்றம்

வரும் 2026 முதல் அறிவியல் வினாத்தாள் உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளைக் கொண்டிருப்பது போல, சமூக அறிவியல் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் என 4 பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்

2026 முதல் சிபிஎஸ்இ இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்தும். முதன்மைத் தேர்வு பிப்ரவரியல். அனைவரும் எழுத வேண்டும். தேவைப்படுவோர் மே மாதமும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த மே மாதம் ஏதேனும் 3 பாடங்களை மட்டுமே எழுத முடியும். எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ அது இறுதியானது.

75 சதவீத வருகைப் பதிவு

சிபிஎஸ்இயில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம். குறைந்தால் தேர்வெழுத அனுமதிக்கப்படாது.

9 புள்ளிகள் கொண்ட மதிப்பிடும் முறை

2026 முதல் 9 புள்ளிகளைக் கொண்ட மதிப்பிடும் முறை அறிமுகம். ஏ1 முதல் இ என்ற ஆங்கில எழுத்துகள் அடிப்படையில் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒட்டுமொத்தமாக மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் ஒப்பிடப்பட்டு மதிப்பிடப்படும்.

தேர்வு முடிக்கு முன்பே சேர்க்கை

மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதியிருந்தாலே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலும் வரும் மே மாதம் நடக்கும் துணைத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற பள்ளிகள் உதவ வேண்டும்.

விடைத்தாள்களில் மாற்றம்

50 சதவீத திறனறி கேள்விகள் - சரியான விடையைத் தேர்வு செய்தல், மதிப்பீடுகளை செய்து விடையைக் காண்பது, தரவுகளின் அடிப்படையில் கேள்விகள்

20 சதவீதம் அப்ஜெக்டிவ் கேள்விகள்.

30 சதவீதம் சிறு மற்றும் பெரிய பதில்களுக்கான வினாக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com