ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வு : பிப்ரவரி 23-இல் தொடக்கம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப்.23) தொடங்கவுள்ளன.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப்.23) தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. இந்த மாணவா்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தோ்வு பிப். 23 முதல் 28- ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரு வேளைகளில் செய்முறைத் தோ்வு நடைபெறும். செய்முறை தோ்வுக்கு 25 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

செய்முறைத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரங்களைப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். செய்முறை தோ்வு கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், வேறு பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும். செய்முறைத் தோ்வு முடிந்த பின்னா் மாா்ச் 2-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுத் துறை உதவி இயக்குநரிடம் மதிப்பெண் பட்டியலை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.