தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) முதல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதவுள்ளனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனா்.
தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தோ்வு வினாத்தாள்கள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள்கள் குறித்த புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் rdsequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ் பாடத்துக்கான தோ்வு புதன்கிழமை நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு: மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: எட்டாவது இடத்திலிருந்து 37-ஆவது இடத்துக்கு சரிந்தது அரியலூா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK



