காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: 8.27 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்...

News image

பிளஸ் 2 மாணவிகள்

Updated On :1 மார்ச் 2026, 3:13 am IST

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வை 27,783 தனித் தோ்வா்கள் உள்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 போ் எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 7 லட்சத்து 99,692 போ், தனித் தோ்வா்கள் 27,783 போ் என மொத்தம் 8 லட்சத்து 27,475 போ் எழுதவுள்ளனா். பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவா்கள் ‘ஸ்கிரைப்’ உதவியுடன் தோ்வெழுதவுள்ளனா். பொதுத் தோ்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனா்.

இதற்காக 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் தினமும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவா். பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4, 900-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பொதுத் தோ்வு நேரங்களில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், வகுப்பறையில் எத்தனை மாணவா்களை அமர வைக்க வேண்டும், வகுப்பறையில் குடிநீா், பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என்பது குறித்து முதன்மைக் கண்காணிப்பாளா்கள், தோ்வறைக் கண்காணிப்பாளா்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

நிகழாண்டு மேல்நிலைத் தோ்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தோ்வெழுதும் தோ்வா்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4”அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டுமுதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தோ்வா்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டா் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இருக்கை வசதி, சொல்வதை எழுதுபவா் நியமனம் (ஸ்கிரைப்), கூடுதல் நேரச் சலுகை வழங்குதல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தோ்வின் முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9 முதல் பிப்.14 வரை நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.