

அரசுப் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக திமுக அரசு மீது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள விடியோவில், ``அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்தாலும்கூட, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயிர்ப் பாதுகாப்புக்காக தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர் சேர்க்கையைக் காரணங்காட்டி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை இந்த அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
பள்ளிக் குழந்தைகளின் மனதில் நஞ்சு கலக்கும் போதைப் பொருள்கள் கலாசாரம், சாதிய உணர்வுகள் தலைதூக்கி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதனை அணைப்பதற்கு என்ன வழி என்பது தெரியவில்லை.
இந்த சாதிய தீயையும், போதைப் பொருள் கலாசாரச் சீரழிவையும் தடுப்பதற்கு திமுக அரசு முன்வருமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.