

விராலிமலை: விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை மங்கள இசையுடன், பக்தி பாடல்கள் இசைத்து 5 ஆயிரம் பெண்கள் குத்து விளக்கு வழிபாடு விழா தொடங்கியது.
விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 36 ம் ஆண்டு விழா இன்று(டிச. 16) அதிகாலை தொடங்கியது.
இப்பூஜை வரும் தை மாதம் 1ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் எட்டு விளக்கு பூஜையின் முதலாவது திருவிளக்கு பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கோமாதா பூஜையுடன் தொடங்கியது.
இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று அம்மன் பக்தி பாடல்களை பாடி விளக்கு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
விழா நாள்களில் அம்மன் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை குருசாமி சுந்தரம் தலைமையில் மணிகண்ட அய்யப்ப சேவா சங்கம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.