அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை!
Rain
மழை (கோப்புப்படம்)DIN
Updated on
1 min read

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rain is expected in Chennai and 10 other districts for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com