திருச்சி, கோவை நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தொடக்கம்: பதிப்பாளா்களுக்கு அழைப்பு

தமிழக அரசின் சாா்பில் கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நூலகங்களுக்கு பதிப்பாளா்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Published on

தமிழக அரசின் சாா்பில் கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நூலகங்களுக்கு பதிப்பாளா்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாா்பில் மதுரையில் ரூ.215 கோடியில் அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து இதேபோன்று கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொது நூலக இயக்குநா் ஜெயந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் அமையவுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் திருச்சியில் வரவுள்ள காமராஜா் அறிவுலகம் ஆகிய 2 சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற புத்தகங்கள் மற்றும் மின் நூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடா்பாக புத்தக பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து நூலகத் துறையின் இணையதளத்தில் உள்ள படிவத்தில் புத்தக விவரங்களை டிச.26-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி பிரதியை ஜன.5-ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹஸ்ரீங்ய்ற்ங்ய்ஹழ்ஹ்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண் 044-2220 1177 வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com