ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ என்று கேட்டு, தவெக தலைவர் விஜய் செல்போனில் விடியோ எடுத்தார்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
2 min read

பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே இன்று நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தின் நிறைவாக, ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமா என்று கேட்டார்.

அதனைக் கேட்ட விஜய் ரசிகர்கள் ஓவென கோஷம் எழுப்பினர். பிறகு விஜய் ஒரு செல்போன் எடுத்து, அதன் மூலம் தவெக கூட்டத்துக்கு வந்திருப்பவர்களுடன் சேர்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தவெக தலைவா் விஜய் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இதனால் பிரசாரம் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு, விஜய்யின் பிரசார கூட்டங்களுக்கு காவல்துறை தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். அடுத்து இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கூட்டம் நடைபெற்றது.

விஜய்
விஜய்

கூட்டத்தில் சுமார் 30 நிமிடங்கள் பேசிய தவெக தலைவர் விஜய், நண்பா, நண்பிகளே, கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும். எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள்தான் முக்கியம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்றுவாருங்கள் என்று கூறினார்.

பிறகு, அனைவரையும் சேர்த்து ஈரோடு செல்ஃபி ஒன்று எடுப்போமா என்று கேட்டுவிட்டு செல்போன் மூலம் செல்ஃபி விடியோவையும் விஜய் பதிவு செய்து கொண்டார். விஜய் செல்ஃபி என்றதுமே, கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல், அனைவரும் உற்சாகமாக கூக்குரல் எழுப்பியவாறு செல்ஃபிக்குத் தயாரானார்கள்.

விஜய் செல்ஃபி எடுத்துவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கூட்டம் நிறைவடைந்த நிலையில் விஜய் தன்னுடைய பிரசார வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார். மக்களும் தனித்தனி வாயில்கள் வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஏற்கனவே, நடிகராக இருந்த போது, விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடலூரில், அவரைக் காண குவிந்த ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வைரலான நிலையில், இன்று ஈரோட்டில் ஒரு செல்ஃபி எடுத்திருக்கிறார் தவெக தலைவராக விஜய்.

Summary

Asked if we could take an Erode selfie, Thavega leader Vijay took a video on his cell phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com