விஜய் பிரசாரம்: தவெகவைப் பார்த்து திமுக கதறுவது ஏன்? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் விஜயமங்கலம் அருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் உரையாற்றி வருகிறார்.
இந்த கூட்டத்தில் பிரசார வாகனத்தின் நின்றவாறு விஜய் பேசியதாவது:
"பெற்றெடுத்த அன்னை கொடுக்கும் தைரியத்தை இங்கு கூடியிருக்கும் அன்னை, தங்கை என அனைவரும் எனக்கு அளித்துள்ளீர்கள்.
விஜய்யின் பெயரைக் கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள். மக்களை என்னிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். இது இப்போ வந்த உறவு கிடையாது, 10 வயதில் சினிமாவுக்கு நான் வந்ததில் இருந்து மக்கள் என்னுடன் நிற்கிறார்கள். மக்கள் ஒருநாளும் என்னைக் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.
மக்களுக்காக எதுவுமே செய்யாமல் கதை மட்டும் பேசுகிறார்கள். அத்திக்கடவு திட்டத்தை விரிவுப்படுத்தினால் 3 மாவட்ட மக்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு ஏன் காட்ட மறுக்கிறீர்கள். ஆட்சி நடத்துகிறீர்களா? கண்காட்சி நடத்துகிறீர்களா?
ஈரோடு மாவட்டத்தில் பிறந்த தந்தை பெரியார்தான் இந்தியாவுக்கே இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவருவதற்காக போராட்டம் நடத்தினார். பெரியாரிடம் இருந்து கொள்கையையும், அவரை பின்பற்றிய அண்ணாவும், எம்ஜிஆரின் தேர்தல் குறிக்கோளை எடுத்துக் கொண்டோம். அவர்கள் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென்று யாரும் கூற முடியாது. உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லையெனில், ஏன் கதறுகிறீர்கள். எங்களுக்கு பயம் இல்லையென்று, சின்ன குழந்தைகள் நடுங்கிக் கொண்டு நடந்து செல்வது போல் உள்ளது. முதலில் மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள். பெரியார் பெயரைச் சொல்லி தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.