திமுக ஒரு தீய சக்தி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் விஜயமங்கலம் அருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் உரையாற்றி வருகிறார்.
இந்த கூட்டத்தில் திமுகவை விமர்சித்து விஜய் பேசியதாவது:
”நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன்.
இப்போதான் புரிகிறது. அவர்கள் கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி.... தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும்தான் போட்டி.
என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இந்த சப்தத்தை ஒருபோதும் முடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்.
செங்கோட்டையன் நம்முடன் சேர்ந்தது நமக்கு கூடுதல் பலம். இவரைப் போன்று பலர் நம்முடன் வந்து சேரப் போகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.