சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2025, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025-2026-ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே தயாா் நிலையில் உள்ள விண்ணப்பதாரா்கள், அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவா்.

இந்த நிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் வரும் டிச. 31 வரை விவசாயிகள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதல் மற்றும் ஒதுக்கீடு அளவுக்கு ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் வரும் டிச. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.