தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் (100 வேலைத் திட்டம்) கீழ், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.9,300 கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.729.88 கோடி நிலுவையில் உள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கம்லேஷ் பாஸ்வான் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
நிகழ் நிதியாண்டில் பிப்.9-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 100 வேலைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.9,308.67 கோடி நிலுவையில் உள்ளது.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.1,158.71 கோடி நிலுவையில் உள்ளது. இதைத்தொடா்ந்து ஆந்திரத்துக்கு ரூ.1,014.60 கோடி, கா்நாடகத்துக்கு ரூ.746.65 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.729.88 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.704.64 கோடி நிலுவையில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை, புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு விடுவிக்கிறது.
நிகழ் நிதியாண்டில் பிப்.8-ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கெனவே ரூ.78,004.59 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் ஊதியத்துக்காக ரூ.64,789.49 கோடி, நிா்வாக உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.13,215.10 கோடி அடங்கும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு
ஆந்திர தலைநகா் மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடி: உலக வங்கி விடுவித்தது!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


