திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையில் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ளும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.17,744 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு

News image

மேற்காசிய போர் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 5:06 am IST

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையில் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ளும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.17,744 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊரக நலன் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்தபோது 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

இதுதொடா்பாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்காசிய போா்ப் பதற்றத்தால் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதாரம், குடியிருப்புகள் கட்டமைப்பு, சாலை மேம்பாடு மற்றும் நீா்நிலை செயல்பாடுகளில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இத்துறைகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

எனவே, மேற்கூறிய துறைகள் சாா்ந்த திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. விபி-ஜி ராம் ஜி திட்டம், 2025 அமலுக்கு வரும் வரை 100 நாள் வேலைத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். ஊதியங்கள் முறையாக வழங்கப்படும். இதற்காக ரூ.17,744 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் 2029, மாா்ச் மாதத்துக்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டும் நோக்கில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் நான்காவது கட்டத்தின்கீழ் 12,100 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வித தொய்வுமின்றி தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.