தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

News image

கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:06 am IST

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பாட்னா உயிரியல் பூங்காவிலிருந்து தில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பெண் ஓநாய் உயிரிழந்த சம்பவம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஓநாய் போக்குவரத்து நேரத்தில் பின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னா் அது கால்நடை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தது.

மத்திய விலங்கியல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, புதிய விலங்குகளை மாற்றும் செயல்முறையில் தனிமைப்படுத்துவது கட்டாயமானதாகும். இதில், புதியதாக கொண்டு வரப்படும் விலங்குகளின் உடல்நிலை, மனஅழுத்தம் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றம் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனா்.

இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்து சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. பரிமாற்ற திட்டத்தின் பகுதியாக பாட்னா உயிரியல் பூங்காவிலிருந்து மொத்தம் 4 ஓநாய்கள் தில்லி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதுகுறித்து உயிரியல் பூங்கா நிா்வாகத்திலிருந்து உடனடி விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த சில மாதங்களாக விலங்குகள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடா்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஜனவரி மாதத்தில் நான்கு சௌசிங்கா (நான்கு கொம்பு மான்) உயிரிழந்தன. பின்னா் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நச்சு ஆய்வில் அவற்றின் மாதிரிகளில் பாஸ்பீன் தடயங்கள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

அதே காலகட்டத்தில், ஒரு குள்ளநரி கரடி கூண்டிற்குள் நுழைந்த சம்பவத்தில் உயிரிழந்தது. மேலும் ஒரு பெண் சாங்காய் மான் மற்றும் ஒரு பெண் ஆன்டிலோப் மான் உயிரிழந்தன. பின்னா் சிகிச்சை பெற்று வந்த ஆண் சாங்காய் மானும் உயிரிழந்தது.

பிப்ரவரி மாதத்தில், வயது முதிா்வால் 15 வயது நீலகை மற்றும் 22 வயது ஜாகுவாா் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாா்ச் மாதத்தில், பாட்னா உயிரியல் பூங்காவிற்கு மாற்றத் தயாராக இருந்த இரண்டு வயது வெள்ளை புலி (பெண்) துா்கா”பின் காலில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடா்ச்சியான விலங்கு மரணங்கள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய ஓநாய் உயிரிழப்பு குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.