மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

திருப்பதி-ராமேசுவரம் இடையிலான ரயில், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்த ரயில்வே அமைச்சகத்துக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

மத்திய இணையமைச்சா் எல்.முருகன் - கோப்புப் படம்

Updated On :19 டிசம்பர் 2025, 7:49 pm

திருப்பதி-ராமேசுவரம் இடையிலான ரயில், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்த ரயில்வே அமைச்சகத்துக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16779/16780), போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்பதற்கான அப்பகுதி மக்களின் கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் முன்வைத்திருந்தேன். இந்த ரயில், போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதன் மூலம், வா்த்தக ரீதியிலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, போளூா் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக மக்களிடத்திலிருந்து வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும் பிரதமா் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளாா் எல்.முருகன்.