தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதையடுத்து பிணையில் அவர் வெளிவருகிறார். காவிரி டெல்டா பகுதிகளில் ஒஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தது. இதை எதிா்த்து திருவாரூா் மாவட்டம் கரியமங்கலத்தில் விவசாய சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் கடந்த 2015-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
அப்போது, ஒஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைச் சேதப்படுத்தியதாக பி.ஆா்.பாண்டியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்ரபாண்டியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் அமா்வு நீதிமன்றம், பி.ஆா்.பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 13,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்தது. இதையடுத்து பி.ஆா்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனிடையே, தீா்ப்பை எதிா்த்து பி.ஆா்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தா் மோகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து 22 போ் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவா் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


