நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
திருநெல்வேலி மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த தமிழக முதல்வருக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கா் பரப்பில் 54,296 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(டிச. 20) திறந்து வைத்தார்.
இன்று(டிச. 21) திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில் திருநெல்வேலி மாவட்டத்துக்கான ரூ.694 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, உரையாற்றினார்.
அப்போது, நெல்லை மாவட்டத்துக்கான 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்கு ரூ.11 கோடி மதிப்பில் அரசு விடுதி அமைக்கப்படும். சேரன்மகாதேவி பகுதியில் ரூ.4 கோடியில் கால்வாய்கள் சீரமைக்கப்படும். நான்குநேரி ராதாபுரம் மக்கள் நலனுக்காக ரூ.5 கோடி மதிப்பில் வள்ளியூர் குளம் சீரமைக்கப்படும் உள்ளிட்ட 3 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
Chief Minister Stalin made 3 important announcements for the Nellai district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

