

சென்னை மெரினா கடற்கரை அருகே இரவுநேரக் காப்பகத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை அருகே அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் 2,400 சதுர அடியில் வீடற்றவர்களுக்கான இரவுநேரக் காப்பகம் கட்டப்பட்டுள்ளது.
ரூ. 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த காப்பகத்தில் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்கு தேவையான தலையணை, போர்வைகள், பாய் உள்ளிட்டவை அளிக்கப்படவுள்ளன.
கழிப்பறை, தண்ணீர், மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி, பிற பகுதிகளிலும் தேவையைப் பொறுத்து இதுபோன்ற இரவுநேரக் காப்பகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் அமைச்சர் கே.என். நேரு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.