தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திராவிடர் - தமிழர் போர்: சீமான் ஆவேசம்!

கீழடியை தமிழர் நாகரிகம் எனச் சொல்வதில் என்ன பிரச்னை? சீமான் கேள்வி

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :28 டிசம்பர் 2025, 7:58 am

கீழடியை தமிழர் நாகரிகம் எனச் சொல்வதில் என்ன பிரச்னை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், "கீழடி - திராவிட நாகரிகம் என்கிறார்கள். 2,800 ஆண்டுகளுக்கு முன்னர் யார் திராவிடர்? ஏது கன்னடம்? தெலுங்கு? மலையாளம்? இல்லையென்றால், தமிழர் நாகரிகம் எனச் சொல்வதில் என்ன பிரச்னை?

பெருவுடையார் கோயிலை திராவிட கட்டடக் கலை என்கிறார்கள், நாகரிகமென்றால் திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்றும், பொங்கல் திருநாளை திராவிட திருநாள் என்றும் சொல்கின்றனர். தமிழ் எங்கே வளர்க்கப்படுகிறது?

80,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வியடைகின்றனர், பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வுக்கு 50,000 பேர் வராமல் தோல்வியுறுகின்றனர். தமிழ் பேசத் தெரிகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜகவுடன் சீமான் கூட்டணி என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கையில், "பாஜகவுடன் கூட்டணி வைத்து, மங்களூரில் சட்டப்பேரவை உறுப்பினரானது யார்? நானா? திருமாவளவனா?

வாஜ்பாய்க்கு வீரவணக்கம் செலுத்துவது அரசியல் நாகரிகம்; ஆனால், பாரதியை பேசுவது அநாகரிகமாகிறதா?

எனக்கு எதிரி விடுதலைச் சிறுத்தைகளா? மதிமுகவா? பாட்டாளி மக்களா? அவர்களுக்காகவா கட்சியை ஆரம்பித்தேன்? இங்கு திராவிடர் - தமிழர் போர் நடக்கிறது.

பெரியாரை அறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் பேசியதைவிட, நான் பேசியதால் சொன்னால், நான் நிறுத்துக் கொள்கிறேன்.

திமுக எதற்காகத் தொடங்கப்பட்டது? யாரை எதிர்த்து தொடங்கப்பட்டது? திராவிட கழகத்திலிருந்து திமுக ஏன் பிறந்தது? சிலப்பதிகாரத்தை வேசிக் கலை என்று சொல்வது சரியா?" என்றும் பேசினார்.

Summary

Dravidian-Tamil conflict: NTK Leader Seeman's fiery speech!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.