தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்கு இலங்கை எம்.பி. நமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் திரைப் பயணம் மற்றும் அரசியல் வருகைக்கு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் நமல் ராஜபக்ச "எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சினிமாவில் அவரது பயணம் மற்றும் வெள்ளித் திரையில் அவரின் ஆற்றல் சிறப்பு வாய்ந்தது மற்றும் மறக்க முடியாதது.
இந்த அத்தியாயத்திலிருந்து வேறொரு புதிய பயணத்துக்கு அவர் தற்போது அடியெடுத்து வைக்கிறார். அவரின் இருப்பை சினிமா நிச்சயம் இழக்கும். அவருக்கு எப்போதும் வெற்றிதான்.
எதிர்காலத்திலும் எல்லாவற்றிலும் அவர் மிகச் சிறந்து விளங்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகனின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமையில் நடந்து முடிந்தது. இந்தப் படத்துக்குப் பின்னர், முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.