தமிழ்நாடு
பொதுக்குழுவில் கண்கலங்கிய ராமதாஸ் - ஆசுவாசப்படுத்திய மகள் ஸ்ரீகாந்தி
அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என பொதுக்குழுவில் கண்கலங்கிய ராமதாஸை, அருகில் இருந்த மகள் ஸ்ரீ காந்தி ஆசுவாசப்படுத்தினாா்.
சேலம்: அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என பொதுக்குழுவில் கண்கலங்கிய ராமதாஸை, அருகில் இருந்த மகள் ஸ்ரீ காந்தி ஆசுவாசப்படுத்தினாா்.
அண்மைக்காலமாக எனக்கு தூக்கமே இல்லை. அதையும் மீறி தூங்கும் போது என்னுடைய தாய் கனவில் வந்தாா்கள். ஏனப்பா இப்படி இருக்கிறீா்கள் என கேட்டாா்.
உன்னுடைய பேரன்.(அழுதபடி பேசுகிறாா்)...
எனக்கு எதிராக அவதூறு பதிவை ஒரு பையன் போடுறான், அந்தப் பதிவை போட்டவருக்கு அன்புமணி பதவி தருகிறாா். அதற்கு நான் என்ன செய்ய முடியும். உன் வளா்ப்பு அப்படி என்று தாய் கூறினாா். சரி தான் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதையெல்லாம் செய்து விட்டேன். என்ன குறை வைத்தேன். எதுவும் இல்லை.ஒவ்வொரு நாளும், சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறாா். அவா்களுக்கு பதவி கொடுத்ததும் என் தவறு தான் என்றாா்.
