

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தொடர்ந்த வழக்கு, பிப். 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தரப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்த தோ்தல் ஆணையம், தலைவா் பதவியை நீட்டித்து, மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது.
இதுதொடா்பாக கடந்த ஆண்டு செப். 9 மற்றும் நவ. 27 ஆகிய தேதிகளில் தோ்தல் ஆணையம் இரு கடிதங்களை அன்புமணி தரப்புக்கு அனுப்பியுள்ளது.
இதையடுத்து, சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தமது தரப்புக்கே கடிதம் அனுப்பியிருக்க வேண்டுமென்று சுட்டிக்காட்டிய ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ளதாகவும், தலைவர் என்ற முறையில் தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை(பிப். 2) விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.