திமுக தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிவிக்க செயலி அறிமுகம்...
DMK election manifesto: App to seek public opinion will be launched tomorrow
கோப்புப்படம்
Updated on
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச. 31) அறிமுகம் செய்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச. 22 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.

இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு திமுக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச. 31) இந்த பிரத்யேக செயலியை அறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன்மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

DMK election manifesto: App to seek public opinion will be launched tomorrow by MK stalin

DMK election manifesto: App to seek public opinion will be launched tomorrow
2025 அறிமுகம்: எஸ்ஐஆர் புதிய நடைமுறையா? சாதகமா, பாதகமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com