

கோவையில் சர்வதேச ஹாக்கி திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் செயற்கை புல்வெளி வசதியுடன் சர்வதேச ஹாக்கி திடல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி திடல் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் 10,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்திக்குட்டையில் ரூ. 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி திடலில் கட்டப்பட்டு உள்ள ஹாக்கி திடல் திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.