திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவது பற்றி...

News image

கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்...

Updated On :30 டிசம்பர் 2025, 2:42 pm IST

அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு அளிப்பதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை பாரிமுனை குறளகத்திலிருந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் பிராட்வே பேருந்து நிலைத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நீதிமன்றம் உள்ளிட்ட 3 இடங்களில் குவிந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்று(டிச. 30) பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மெரீனா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Summary

Sanitation workers stage protest at Karunanidhi memorial!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.