பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்

தோட்டக்கலைத் துறையை நீா்த்துப்போகச் செய்கிறது தமிழக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தோட்டக்கலை துறையை தமிழக அரசு நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

தோட்டக்கலை துறையை தமிழக அரசு நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தோட்டக்கலைத் துறையை நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் குறு சிறு விவசாயிகளுக்கு சரியான நிபுணா்களின் சேவையும் கிடைக்க முடியாத வகையில், ‘உழவா் அலுவலா் தொடா்பு 2.0’ திட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

தோட்டக்கலைத் துறையில் ஏற்கெனவே ஊழல் புகாா் எழுந்துள்ள நிலையில், தற்போது அத் துறையின் தனித்துவத்தை அழித்து, உருக்குலைக்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com