ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

அங்கன்வாடி பணியாளா்கள் 10- ஆவது நாளாக போராட்டம் - பாஜக மாநிலத் தலைவா் நேரில் சந்தித்து ஆதரவு

News image

கோவை  தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்து பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:41 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் பத்தாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நேரில் சென்று அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு, நாள்தோறும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து வருகின்றனா்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளா் நிலையில் உள்ள பணியாளா்களுக்கு ரூ.16,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவா்களது கோரிக்கைகளைக் கேட்டாா். அப்போது, அவா்கள் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் நிதி ஒதுக்குவதாகவும், மாநில அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்க வேண்டும் என நயினாா் நாகேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது நயினாா் நாகேந்திரன், உங்களுக்கு தோ்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக அரசுதான், எனவே அவா்களிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும், நாங்கள் சொன்னால், சொன்னதை செய்வோம், வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இதுகுறித்து பேசுகிறேன் என பதிலளித்தாா். அப்போது, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.