திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு அண்ணாமலை எதிர்ப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதியும் கூறினர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ``திருப்பரங்குன்றத்தின் வரலாறு குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிந்துகொள்ள வேண்டும். இதே வழக்கை 1931 ஆம் ஆண்டில் விசாரித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஹிந்துகளுக்காக தற்காக்கப்பட்ட கோவிலைக் கொடுக்க திமுக தயாராக இருக்கிறது.

இதனிடையே, 350-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பாஜகவினரை பெரியாளாக வளர்த்து விடுவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி. நீதிமன்ற அறிவிப்புக்குப் பின்னரே, பாஜகவினர் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுதல் கூடாது. வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்துதல் வேண்டும். அமைச்சர் அடக்குவதாய் கூறும் யாரும் கஞ்சா விற்கவோ, பெண்களைத் துன்புறுத்தவோ இல்லை. இவர்கள் முருக பக்தர்கள். முதலில், கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில், முருக பக்தர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர்கள் கூறுவது வெட்கக்கேடு. முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’’ என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆள்களுடன் வந்தார். அப்போது எம்.பி.யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிலிருந்து திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்கு ஆளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.